அர்த்த சாம அழகர்
சிதம்பரத்தில்
உள்ள நடராஜர் கோயிலுக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அக்கோயில் ஆகாயம் என்னும்
ஐந்தாம் ஐம்பூத திருத்தலம் என்பது அனைவரும்
அறிந்ததே. பலரறியா தனிச்சிறப்புகள் பலவும்
நடராஜர் கோயிலுக்கு உண்டு. அதில் ஒன்று தான் இந்த அர்த்தசாம அழகர்.
சிதம்பரம் நடராஜர்
கோயிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும். அவற்றுள் மிக முக்கியமான பூஜை அர்த்த சாம
பூஜை ஆகும். தரிசிக்க வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தக்கக்கூடிய சிறப்பு அம்சங்கள்
இந்த பூஜைக்கு உண்டு. இப்பூஜை அணைத்து சிவாலயங்களிலும் நடைபெறும். அணைத்து சிவாலயங்களில்
அர்த்த சாம பூஜை முடிந்த பின் தான் சிதம்பரத்தில் அப்பூஜை ஆரம்பிக்கப்படுகிறது. பொதுவாக
மற்ற சிவாலயங்களில் சிவனின் அர்த்த சாமபூஜை முடித்து, பைரவ மூர்த்தியை வணங்குவர். அதன்
பின் தான் கோயில் கதவுகள் மூடப்படும். ஆனால் சிதம்பரத்தில் மட்டும் நடராஜருக்கு பூஜை
முடிந்து, ப்ரஹ்மசண்டிகேசுவரருக்கும்,பைரவருக்கும் பூஜை நடைபெறும். அதன் பின் தான்
அர்த்த சாம அழகர் என்னும் திருத்தல பாலகர் பூஜிக்கப்படுகிறார்.
வரலாறு:
ஜோதிடரன்
ஒருவன் பலரிடம்
பெற்ற சாபத்தால் மறு பிறவியில் பல்லியாகப்
பிறந்தான். அவன் செய்த நற்செயல்களின்
பலனால் அவன் தில்லையில் பிறக்கும்
பேறு பெற்றான். அந்தப்பல்லி சித்சபையின் கொடுங்கைக்குள் வசித்து வந்தது. அதன்
புண்ணியங்களின் பலனால் அதற்கு சிவ
பக்தி உண்டாக நேர்ந்தது. நடராஜ பெருமானின் திருவருளால்
சிவகனமாய் இரவில் கோயிலை காவல்
காக்கும் அரும்பெரும் பணியை பெற்றது. இந்த பல்லி தான்
அர்த்த சாம அழகர் என்று
அழைக்க படுகிறது.
அர்த்த சாம அழகரை
கோயிலில்
எங்கு
காணலாம்?
சித்சபையின்
ஈசான பாகத்தில் தேவ சபையின் மேற்கு
சுவரில் அமைந்துள்ள மாடத்தில் சித்சபையை நோக்கியவாறு அர்த்த ஜாம அழகர்
காட்சி அளிக்கிறார். சித்சபையின் கூரையில் ப்ரஹ்மசண்டிகேசுவரர் சந்நிதிக்கு அருகில் அந்த பல்லி
பொறிக்கப்பட்டுள்ளது. அர்த்த சாம பூஜையை
காண வரும் பக்தர்கள் அர்த்த
சாம அழகரையும் தரிசிக்கலாம். அந்த பல்லி வணங்கிய
சிவலிங்கம் பல்லிகேசுவரர் என்ற பெயரில் இரண்டாம்
பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகிலுள்ளது.
வழிபாட்டு பலன்கள்
:
அர்த்தசாம
அழகரை வழிபட்டால் களவு போன அல்லது
தொலைந்து போன பொருட்கள் திரும்ப
கிடைக்கும்.செல்வங்கள் நிலைத்து, கடன் தொல்லைகள் நீங்கும்
என்று மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment