Thursday, April 2, 2020


பேரிடர் சூழல் சொல்லும் சிந்தனை
*இந்த பதிவு சிந்தனைக்காக மட்டுமே*

இப்போது நாம் செய்யவேண்டிய செயல்களில் சில...

இப்போது நிலவும் சூழ்நிலை நீண்ட நாள் நீடிக்காமல் போனாலும் இதனுடைய தாக்கம் பலவகைகளில் காணப்படும்.
சுழன்று கொண்டிருந்த பொருளாதாரம் தேங்க தொடங்கியுள்ளது. பணம் ஆனது தனது மதிப்பில் நிலைக்க சிரமப்படும். அரசாங்கம் தனது சேவையின் அதிகபட்ச எல்லையை அடைந்து விட்டது.

  • முதலில் தொலைக்காட்சி போன்ற  கேளிக்கைகளை  விட்டு விலகுங்கள். அவை வாழ்வில் ஒரு மிகச்சிறு அங்கமாக மட்டுமே இருக்கவேண்டும்.
  •  மனிதகுலமாக நாம் கடந்து வந்த பாதைகளை பற்றி சிந்தியுங்கள். இந்த சூழலுக்கான காரணிகளும் தீர்வுகளும் உங்களுக்கே புரியும்.
  •  உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள். வேண்டியோருக்கு உணவளியுங்கள். ஆதரவாக இருங்கள்.
  • மிகுதியான உணவு உற்பத்தி என்பது ஓர் முக்கிய தேவைகளில் ஒன்று என்பதை உணருங்கள் 
  •  விவசாயம் செய்வோர் அதில் தீவிரமாக ஈடுபடுங்கள். வாய்ப்பிருப்பவர்கள் வீட்டின் சுற்றுப்புறங்களை ஆக்கத்திற்காக பயன்படுத்த தொடங்குங்கள்
  •  அத்தியாவசிய தேவைகளை சுயமாக நிறைவேற்ற முற்படுங்கள். அது ஒரு மிகச்சிறு செயலாகவும் இருக்கலாம். நுகர்வோர் கலாச்சாரம் இனி  கடினம்.
  • நாம் இனி விழிப்புடன் உழைக்க வேண்டிய தருணம்உடல்நலத்தை பேணுங்கள்கேளிக்கை உணவுகளை முற்றிலும் தவிருங்கள்.   உணவு மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் 
  • சிந்தனைகளை சீர்படுத்துங்கள்தெளிவான சிந்தனை மட்டுமே தீர்வு கொடுக்கும்கோடிக்கணக்காண மக்களின் சிந்தனை சக்தி நமக்கு தேவை. பெரும் பொறுப்பை ஒரு சிலரிடம் ஒப்படைத்து விலகுவது முறையல்ல.
  •  இலக்கியம் மற்றும் பாரம்பரிய வழிகளை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். பாரம்பரிய அறிவை பகிருங்கள். அனைவரும் அதற்கு முற்படுங்கள்.
  • அரசு என்னும் இயந்திரம் இதற்கு மேலும் பாரம் தங்குவது கடினம்நாம் ஒவ்வொருவரும் செயலாற்றுவோம்
  • நமது கடவுளரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்நமக்காக மட்டுமின்றி சமூக நலனுக்காகவும்உலக நன்மைக்காகவும் சேர்த்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
நல்ல விருப்பமும் சிந்தனையும்  நல்லவிளைவுகளை  மட்டுமே தரும்
*வாழ்வோம் வளமுடன்*

Wednesday, March 4, 2020


அர்த்த சாம அழகர்

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அக்கோயில் ஆகாயம் என்னும் ஐந்தாம் ஐம்பூத திருத்தலம்  என்பது அனைவரும் அறிந்ததே. பலரறியா  தனிச்சிறப்புகள் பலவும் நடராஜர் கோயிலுக்கு உண்டு. அதில் ஒன்று தான் இந்த அர்த்தசாம அழகர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும். அவற்றுள் மிக முக்கியமான பூஜை அர்த்த சாம பூஜை ஆகும். தரிசிக்க வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தக்கக்கூடிய சிறப்பு அம்சங்கள் இந்த பூஜைக்கு உண்டு. இப்பூஜை அணைத்து சிவாலயங்களிலும் நடைபெறும். அணைத்து சிவாலயங்களில் அர்த்த சாம பூஜை முடிந்த பின் தான் சிதம்பரத்தில் அப்பூஜை ஆரம்பிக்கப்படுகிறது. பொதுவாக மற்ற சிவாலயங்களில் சிவனின் அர்த்த சாமபூஜை முடித்து, பைரவ மூர்த்தியை வணங்குவர். அதன் பின் தான் கோயில் கதவுகள் மூடப்படும். ஆனால் சிதம்பரத்தில் மட்டும் நடராஜருக்கு பூஜை முடிந்து, ப்ரஹ்மசண்டிகேசுவரருக்கும்,பைரவருக்கும் பூஜை நடைபெறும். அதன் பின் தான் அர்த்த சாம அழகர் என்னும் திருத்தல பாலகர் பூஜிக்கப்படுகிறார்.
வரலாறு:
ஜோதிடரன் ஒருவன்  பலரிடம் பெற்ற சாபத்தால் மறு பிறவியில் பல்லியாகப் பிறந்தான். அவன் செய்த நற்செயல்களின் பலனால் அவன் தில்லையில் பிறக்கும் பேறு பெற்றான். அந்தப்பல்லி சித்சபையின் கொடுங்கைக்குள் வசித்து வந்தது. அதன் புண்ணியங்களின் பலனால் அதற்கு சிவ பக்தி உண்டாக நேர்ந்தது. நடராஜ பெருமானின் திருவருளால் சிவகனமாய் இரவில் கோயிலை காவல் காக்கும் அரும்பெரும் பணியை பெற்றது. இந்த பல்லி தான் அர்த்த சாம அழகர் என்று அழைக்க படுகிறது.
அர்த்த சாம அழகரை கோயிலில் எங்கு காணலாம்?
சித்சபையின் ஈசான பாகத்தில் தேவ சபையின் மேற்கு சுவரில் அமைந்துள்ள மாடத்தில் சித்சபையை நோக்கியவாறு அர்த்த ஜாம அழகர் காட்சி அளிக்கிறார். சித்சபையின் கூரையில் ப்ரஹ்மசண்டிகேசுவரர் சந்நிதிக்கு அருகில் அந்த பல்லி பொறிக்கப்பட்டுள்ளது. அர்த்த சாம பூஜையை காண வரும் பக்தர்கள் அர்த்த சாம அழகரையும் தரிசிக்கலாம். அந்த பல்லி வணங்கிய சிவலிங்கம் பல்லிகேசுவரர் என்ற பெயரில் இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகிலுள்ளது.
வழிபாட்டு பலன்கள் :
அர்த்தசாம அழகரை வழிபட்டால் களவு போன அல்லது தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைக்கும்.செல்வங்கள் நிலைத்து, கடன் தொல்லைகள் நீங்கும் என்று மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது.


பேரிடர் சூழல் சொல்லும் சிந்தனை * இந்த பதிவு சிந்தனைக்காக மட்டுமே * இப்போது நாம் செய்யவேண்டிய செயல்களில் சில ... இப்போ...